ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பாகிஸ்தானில் உள்ளார் - தலிபான்கள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது.

Update: 2022-09-15 02:57 GMT

 Image Courtesy: ANI

காபூல்,

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக ஆப்கானிஸ்தான் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு சமீபத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு கடிதம் எழுதியது. மசூத் அசார் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் அல்லது கன்ஹார் பகுதிகளில் இருக்கலாம் என பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கடிதத்திற்கு பதிலளித்த அவர், " ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை என தெரிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய அமைப்பு. ஆனால், அவர் ஆப்கானிஸ்தானில் இல்லை, எங்களிடம் இது போல எதுவும் கேட்கப்படவில்லை. மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் உள்ளார் என செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது உண்மையல்ல என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என பாகிஸ்தான் கூறிவருகிறது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்