இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் அமைதியுடன் வாழ தகுதியானவர்கள் - ஜோ பைடன்
இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் அமைதியுடன் வாழ தகுதியானவர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் அமைதியுடன் வாழ தகுதியானவர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் சமாதானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இரு நாடுகளின் தீர்வை நாம் கைவிட முடியாது. இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் சமமாக பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியுடன் வாழ தகுதியானவர்கள்" என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.