இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக காசா முனை, மேற்குகரை உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்துள்ளது. இதன்படி சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.