இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்நிறுத்தம்-ரஷியாவின் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட ரஷியாவின் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிராகரிக்கப்பட்டது.
நியூயார்க்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஷியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது.
5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்பட மொத்தம் 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை.
ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்துக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிராக வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, சுவிட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது.