இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் ஒரே நாளில் 165 பேர் பலி

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் விதமாக காசா கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது.

Update: 2024-01-29 04:54 GMT

Photo Credit: AFP 

காசா,

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கி, 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது.

குறிப்பாக மத்திய காசா பகுதியில் இஸ்ரேலின் தரைப்படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. கடந்த 2 நாட்களாக நஸர் ஆஸ்பத்திரி மற்றும் அல் அமல் ஆஸ்பத்திரி சுற்று வட்டாரத்தில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகமாக இருப்பதாகவும், அல் அமல் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்த நிலையில் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று பகலுடன் முடிந்த முந்தைய 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் 165 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 290 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் ஹமாஸ் நிர்வாக அமைப்பின் சுகாதாரத் துறை அறிவித்தது. இதன் மூலம் அங்கு பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 422 ஆக உயர்ந்து உள்ளது. 65 ஆயிரத்து 87 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்