இஸ்ரேல் சென்ற கப்பலை டிரோன் மூலமாக தாக்க முயற்சி
இஸ்ரேலுக்கு சென்ற கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர்.
பாரீஸ்,
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பல அரபு நாடுகள் செயல்படுகின்றன. அதேபோல் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் கடற்பகுதி வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
அந்தவகையில் இஸ்ரேலுக்கு சென்ற கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர். அப்போது செங்கடல் பகுதியில் உள்ள பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் அதனை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. இந்த டிரோன்கள் ஏமன் நாட்டின் கடற்பகுதியில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏவப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.