கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஈராக்கில் ரூ.12 லட்சம் கோடி பட்ஜெட் அறிவிப்பு

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஈராக்கில் ரூ.12 லட்சம் கோடி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

Update: 2023-06-12 19:28 GMT

Image Courtacy: AFP

பாக்தாத்,

அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கில் இருந்து தனி நாடாக குர்திஸ்தான் பிரிந்தது. இர்பிலை தலைநகராக கொண்ட இது ஈராக்கின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டது. இந்த இருநாடு களுக்கிடையே பொருளாதார ரீதியில் மோதல் வலுத்து வருகிறது. 329 இடங்களை கொண்ட ஈராக் நாடாளுமன்றத்தில் 60 இடங்கள் குர்து இனமக்களுக்கென வகுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவே கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது பெரும்பான்மையை சேர்ந்த முகமது அல்-சூடானி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் அவரின் அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாமல் தடுமாறியது. எண்ணெய் வளம் செழித்த ஈராக்-குர்திஸ்தானில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை ஈராக்கின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இதனால் ஈராக் நிதிநிலைமை மோசமானது.

இந்தநிலையில் இருதரப்பும் கலந்தாலோசித்து 2023-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அதன்படி 152 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) பட்ஜெட்டை அறிவித்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக குர்திஸ்தான் தாமாக கச்சா எண்ணெய் பீப்பாய்களை ஏற்றுமதி செய்ய ஈராக் அனுமதியளித்துள்ளது. ஆனால் நாட்டின் பராமரிப்பு செலவுக்காக அதன் வருமானத்தில் பாதியை ஈராக் அரசு எடுத்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்