ஈரானில் ரெயில் தடம் புரண்டு விபத்து - பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

கிழக்கு ஈரானில் ரெயில் தடம் புரண்டதில் குறைந்தது 17 பேர் பலியானர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Update: 2022-06-08 11:24 GMT

தெஹ்ரான்,

ஈரான் தலைநகா் தெஹ்ரான் ரெயில்வே நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, தபாஸ் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் மஷாத் மற்றும் யாஸ்த் நகரங்களுக்கு இடையில் இன்று அதிகாலையில் ரெயில் தடம் புரண்டது.

இந்த ரெயிலில் 348 பேர் பயணம் செய்தனர். அதில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் 60-க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளம் தோண்டும் இயந்திரத்தில் ரெயில் மோதியதாகவும், இதன் காரணமாக ரெயில் தடம் புரண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்