பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி: வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 3-வது முறையாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.

Update: 2023-02-16 16:57 GMT

பிராங்ப்ரூட்,

உக்ரைன் மீதான போர் தொடங்கிய பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷியாவின் மீது கடுமையான தடைகளை விதித்தன. ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டில் விலைவாசி 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 3-வது முறையாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதனை சமாளிக்க ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் முக்கிய மறுகடன் செயல்பாடுகள், விழிம்பு நிலை கடன் மற்றும் வைப்புத்தொகை ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்கள் முறையே 3, 3.5 மற்றும் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்