இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்தது குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை

எரிமலையில் இருந்து வானுயுரத்துக்கு புகை மண்டலம் எழுந்தது. சாம்பல் புகையுடன் நெருப்பு குழம்பையும் எரிமலை கக்கி வருகிறது.

Update: 2022-12-04 23:45 GMT

ஜகார்த்தா, 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அமைந்திருக்கிறது அந்த நாட்டின் மிகப்பெரிய எரிமலை செமேரு. 12,060 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை நேற்று அதிகாலை திடீரென வெடித்து சிதறியது. இதை தொடர்ந்து எரிமலையில் இருந்து வானுயுரத்துக்கு புகை மண்டலம் எழுந்தது. சாம்பல் புகையுடன் நெருப்பு குழம்பையும் எரிமலை கக்கி வருகிறது. இந்த எரிமலை வெடிப்பு அங்கு பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. இதை தொடர்ந்து எரிமலையில் இருந்து 5 கி.மீ தூரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக அங்குள்ள ஆறுகளில் எரிமலை குழம்புகள் மிதந்துவரும் வாய்ப்புகள் உள்ளதால், ஆற்றுப்படுகைகளிலிருந்து 500 மீட்டர் தள்ளியே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எரிமலைக்கு அருகில் சென்று புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்ததும், இதில் 51 பேர் பலியானதும் நினைவுக்கூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்