நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் - ஐ.நா. கணிப்பு

ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை, உலக பொருளாதார சூழ்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Update: 2022-05-19 16:55 GMT

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உக்ரைன் போர், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கிறோம். இது, கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்ட 4 சதவீதத்தை விட குறைவு.

அதுபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும். இது கடந்த ஜனவரி மாத கணிப்பை விட 0.3 சதவீதம் குறைவு. (கடந்த நிதியாண்டில் 8.8 சதவீத வளர்ச்சி இருந்தது). பணவீக்கம் அதிகரித்தபோதிலும், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு அதன் பொருளாதார மீட்சி வலிமையானதாக இருக்கும். மற்ற நாடுகளை விட இந்தியா நல்லநிலையில்தான் இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2.6 சதவீதமும், சீன பொருளாதாரம் 4.5 சதவீதமும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்