பாகிஸ்தானில் அதிபர், பிரதமரை விட அதிகம் சம்பளம் பெறும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்
பாகிஸ்தானில் அதிபர் மற்றும் பிரதமரை விட அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிகம் சம்பளம் பெறுகின்றனர்.;
லாகூர்,
பாகிஸ்தானில் அதிபர், பிரதமர் மற்றும் மந்திரிகள் அரசு அதிகாரிகள், உள்ளிட்டோர் பெற கூடிய சம்பள விவரங்களை அந்நாட்டின் பொது கணக்கு குழு வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், குழுவின் முன் அதன் தலைவர் நூர் கான் கூறும்போது, பாகிஸ்தானின் அதிபர் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பின்படி ரூ.8,96,550 சம்பளம் பெறுகிறார் என தெரிவித்து உள்ளார்.
அந்நாட்டின் பிரதமரின் சம்பளம் ரூ.2,01,574 ஆகும். எனினும் பாகிஸ்தானின் தலைமை நீதிபிதியின் சம்பளம் ரூ.15,27,399 ஆக உள்ளது. சுப்ரீம் கோட்டின் நீதிபதிகளின் சம்பளம் ரூ.14,70,711 ஆகும்.
இதனால், பாகிஸ்தானில் அதிபர், பிரதமரை விட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிகம் சம்பளம் பெறுகின்றனர் என தெரிய வந்து உள்ளது. இதேபோன்று மத்திய மந்திரிகளின் சம்பளம் ரூ.3,38,125 ஆக உள்ளது. இது பிரதமரின் சம்பளத்திற்கும் கூடுதல் ஆகும்.
நாடாளுமன்றவாதி ஒவ்வொருவரும் ரூ.1,88,000 சம்பளமும், கிரேடு-22 நிலையிலான அதிகாரி ஒருவர் ரூ.5,91,475 சம்பளமும் பெறுகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.