அமெரிக்காவில் களைகட்டிய வெப்பக்காற்று பலூன் திருவிழா

வெப்பக்காற்று பலூன் திருவிழாவில் இந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2022-07-31 03:43 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் 39-வது வெப்பக்காற்று பலூன் திருவிழா தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இந்த திருவிழாவில் வெப்பக்காற்று மூலம் வானில் பறக்கும் பல வண்ண பலூன்கள் காண்போரின் கண்களை கவர்கின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்து முறையாக செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெறும் வெப்பக்காற்று பலூன் திருவிழாவில் சுமார் 1.75 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்