தென்கொரியாவை புரட்டி போட்ட 'ஹின்னம்னோர்' சூறாவளி புயல்

புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2022-09-06 17:06 GMT

சியோல்,

மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஹன்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது.

துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

புயல் காரணமாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. கனமழை, வெள்ளம், சூறாவளி காற்று காரணமாக தென்கொரியாவின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்