உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள்: ஜெர்மனி அனுப்புகிறது
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
பெர்லின்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 4 மாதங்களை கடந்து நீடிக்கிறது. போதுமான அளவில் கனரக ஆயுதங்கள் இல்லாததால், ரஷியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறுவதாக சொல்லப்படுகிறது
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டுள்ள 18 'பிஇசட்எச் ஹோவிட்சர்' கனரக ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு 2 அல்லது 3 ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை அனுப்புவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக டச்சு மற்றும் வாய்ப்புள்ள பிற நன்கொடையாளர்களிடம் பேசுவதாகவும் ஜெர்மனி ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.