கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு; எலான் மஸ்க்
கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டொனால்டு டிரம்பிற்கு எக்ஸ் வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், டிரம்பிற்கு ஆதரவான கருத்துக்களை எலான் மஸ்க் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகத்தையும் அமெரிக்காவையும் காப்பாற்றுவார். கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் எனது வார்த்தைகளை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.