ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம் - டூடுல் வெளியிட்டு அசத்திய கூகுள்..!!
பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.
'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி ஏவப்பட்டது.
இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த சில தினங்களாக இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இன்று கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு அசத்தியுள்ளது.
அந்த டூடுலில் கூகுள் என்ற வார்த்தைக்கு இடையே தோன்றும் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி எடுத்த புகைப்படம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.