ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தம்: லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து!

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.;

Update:2022-09-02 12:28 IST

பெர்லின்,

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.

விமானிகள் சங்கமான 'வெரினிகுங் காக்பிட்' ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜெர்மன் விமான நிறுவனமான லுப்தான்சா வெள்ளிக்கிழமை(இன்று) பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் உட்பட 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.

5,000க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விமானிகள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இதனால் இன்று ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.

இதன்காரணமாக இன்று ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச் விமான நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படும் என்று லுப்தான்சா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1,30,000 பயணிகள் பாதிப்படைவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்