காசா: அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டுகோள்

காசாவின் அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2023-10-21 03:52 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்த சூழலில், வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர். புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.

அல் ஆலி மருத்துவமனையில் நடந்த தாக்குதலை போன்று வேறு சம்பவம் நடந்து விடாமல் தடுக்கவும், அல்-குத்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க, அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில், சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது 2 பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் உரையாடல் என கூறப்படுகிறது. அதில், மருத்துவமனை மீது ஏவப்பட்ட ராக்கெட் அவர்களுடைய குழுவினருடையது என அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, முதல்கட்ட விசாரணையின்படி, மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலை நோக்கி இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. ஆனால் அது தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்தன என தெரிய வந்துள்ளது என்று கூறினார். இந்த தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்