காம்பியா துணை அதிபர் இந்தியாவில் காலமானார்; அதிபர் இரங்கல்

காம்பியா துணை அதிபர் பதரா ஆலியூ ஜூப் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

Update: 2023-01-19 05:27 GMT



பாஞ்சுல்,


காம்பியா நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஆடமா பேர்ரோ. இவரது ஆட்சியில் 2017 முதல் 2022 வரை 5 ஆண்டுகள் கல்வி மந்திரியாக பதவியில் இருந்தவர் பதரா ஆலியூ ஜூப் (வயது 65). அதன்பின் கடந்த ஆண்டு ஜூப் துணை அதிபராக ஆனார்.

இந்நிலையில், 3 வாரங்களுக்கு முன் பதராவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. அதற்கு பல மாதங்களுக்கு முன் அவர் பொதுவெளியிலும் தோன்றவில்லை.

இதனை தொடர்ந்து, சிகிச்சை பெறுவதற்காக அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

பதரா ஜூப் மறைவுக்கு அதிபர் பேர்ரோ இரங்கல் தெரிவித்து உள்ளார். 2016-ம் ஆண்டு அதிபராக பேர்ரோ பதவியேற்றதில் இருந்து அவரது ஆட்சியின் கீழ் 4-வது துணை அதிபராக பதவி வகித்தவர் பதரா ஜூப்.

அவரது மறைவுக்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், காம்பிய அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்