பிரான்ஸ்: கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களுக்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆறுதல்
சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை இமானுவேல் மேக்ரான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாரீஸ்,
பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மீது மர்ம நபர் கத்தியால் குத்தினார். இதில் 6 சிறுவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனையடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கத்திக்குத்து சம்பவம் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.