பிரான்ஸ்: யூத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை

இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து யூத சமூகத்தினர் தொடர்ந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-08-24 15:20 GMT

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தெற்கே லா கிராண்ட்-மோட்டி நகரில் யூத மத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று காலை திடீரென வெடிகுண்டு ஒன்று வெடித்து உள்ளது. இதுபற்றி பிரெஞ்சு பயங்கரவாத ஒழிப்பு வழக்கறிஞர்கள் கூறும்போது, இதுபற்றி விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதுபற்றி பிரான்ஸ் நாட்டு பிரதமர் கேப்ரியேல் அட்டால் கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்தில் காவல் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார். நம்முடைய சக யூத மக்கள் மீண்டும் இலக்காக கொள்ளப்பட்டு உள்ளனர். இது யூத ஒழிப்புக்கான நடவடிக்கையாக உள்ளது.

இந்த புதிய சோதனையான தருணத்தில், அவர்களுக்கு என்னுடைய முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன். நாம் அவர்களின் பக்கம் இருக்கிறோம் என்றார்.

சந்தேகத்திற்குரிய நபரை தேடும் பணியில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தப்ப முடியாது என்றும் கூறியுள்ளார். இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து யூத சமூகத்தினர் தொடர்ந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நடப்பு மாத தொடக்கத்தில், உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மனின் கூறும்போது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு 2024-ம் ஆண்டின் முதல் பாதியில், இஸ்ரேலில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் மும்மடங்காக அதிகரித்து உள்ளன என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்