இலங்கை முன்னாள் மந்திரி பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி...!

விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பசில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-12 03:47 GMT

கொழும்பு,

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததையடுத்து, பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார்.

கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இலங்கை அருகில் உள்ள ஒருநாட்டில் தங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகின. புதன்கிழமை கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை முன்னாள் மந்திரி பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். இதற்காக கட்டுநாயக்கா விமானநிலைய சென்ற பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பசில் ராஜபக்சே மீண்டும் இல​ங்கை திரும்பியுள்ளார்.

மேலும் விமானநிலையத்தில் இருந்த பயணிகள் பசில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்