பின்லாந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்
சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
ஹெல்சின்கி,
பின்லாந்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 200 நாடாளுமன்ற தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த 2,400 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி மற்றும் ரிக்கா புர்ரா தலைமையிலான தி ஃபின்ன்ஸ் கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி உள்ளது.
எனினும் பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று நள்ளிரவில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.