கண்ணைக் கவரும் வண்ண பலூன்கள் - அமெரிக்காவில் களை கட்டிய வெப்பக் காற்று பலூன் திருவிழா
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் வாரம் நடத்தப்படும் வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.;
அல்புகெர்கி,
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் வாரம் நடத்தப்படும் வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
அல்புகெர்கி நகரில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 50-வது வெப்பக் காற்று பலூன் திருவிழா தொடர்ந்து 9 நாட்களுக்கு களைகட்டும். 1972 ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்ட இந்த திருவிழாவின் போது வெறும் 13 வெப்பக் காற்று பலூன்கள் மட்டுமே பறக்க விடப்பட்டன.
ஆனால் இப்போது 600 முதல் 700 வெப்பக் காற்று பலூன்கள் ஒவ்வொரு வருடமும் பறக்க விடப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கிய நிலையில், அல்புகெர்கி நகர வானை வண்ண வண்ண ராட்சத பலூன்கள் அலங்கரித்தன.