இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு

ராஜபக்சே சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராட்டத்தை தொடர்ந்தனர்.;

Update:2023-12-16 05:30 IST
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு

கொழும்பு, 

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கேத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சோ ஆகியோரே காரணம் என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ராஜபக்சே சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் பெரும் வன்முறைகள் அரங்கேறின. அதனை தொடர்ந்து மே மாதம் மகிந்த ராஜபக்சேவும், ஜூன் மாதம் கேத்தபய ராஜபக்சேவும் தங்களின் பதவியை ராஜினமா செய்தனர். அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் இலங்கையில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் மாநாடு தலைநகர் கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் மாநாட்டில் பேசுகையில், "பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நாங்கள் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறோம். விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்டாலும் தொடர்ந்து வளர்ச்சியை உறுதி செய்தோம்" என கூறினார்.

2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்