மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

மெட்டா நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.10,761 கோடி அபராதம் விதித்துள்ளத்து.

Update: 2023-05-23 17:19 GMT

பிரசல்ஸ்,

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் (டிபிசி) நடத்திய விசாரணையில், ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு வழங்கிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஐரோப்பிய யூனியன் பயனாளர் டேட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்காக ஐரோப்பிய டேட்டா புரடெக்ஷன் போர்டு (இடிபிபி) மெட்டா நிர்வாகத்துக்கு ஒட்டுமொத்தமாக 1.2 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,761 கோடி) அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் கூறுகையில், "ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. முற்றிலும் குறைபாடுடையது. பிறநிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மெட்டா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்