ரஷியாவில் புதிய பெயரில் இயங்கத் தொடங்கிய மெக்டொனால்ட்ஸ்
புதிய பெயரில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் ரஷியாவில் இயங்கத் தொடங்கி உள்ளன.;
மாஸ்கோ,
1990 ஆம் ஆண்டு ரஷியாவில் மெக்டொனால்ட்ஸ் (McDonald's) ஐ அறிமுகப்படுத்தபட்டது. முன்னதாக உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷியா-வை விட்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியேறியது.
ரஷியாவை விட்டு அதன் உணவகங்கள் வெளியேறிய நிலையில், தற்போது வுகூஸ்னோ & ஐடோச்கா என்ற பெயரில் நேற்று முதல் இயங்கத் தொடங்கி உள்ளன. ரஷியாவில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட அலெக்சாண்டர் கோவர் அங்குள்ள 850 மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நடத்த காப்புரிமையை பெற்றார். தலைநகர் மாஸ்கோவில், முதல் உணவகத்தை திறந்து வைத்த கோவர், இதற்கு முன் பரிமாறப்பட்ட அதே உணவு வகைகள் இனி புதிய பெயர்களில் பரிமாறப்படும் என்றும் இந்த நிறுவனத்தை மேம்படுத்துவது தனக்கு பெருமை என்றும் அவர் கூறினார்.