பிரிட்டனில்"சம்பள உயர்வு கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு" :ரயில்வே நிர்வாகம் பாதிக்கும் அபாயம்

பிரிட்டனில் சம்பள உயர்வு கோரி ரயில்வே ஊழியர்கள் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2022-06-19 10:54 IST

லண்டன்,

பிரிட்டனில் அதிகரித்து வரும் செலவு நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பிரிட்டன் மக்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்க முடியாது என்று பிரிட்டன் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் ரயில்வே ஊழியர்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வுக்காக 3 நாட்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் பெரிய ரயில்வே நெட்வொர்க்கை முடக்கிப்போடும்.

மேலும், பள்ளி ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் நல சங்கம் இது குறித்து கூறியிருப்பதாவது, செலவு நெருக்கடியில் மோசமான கட்டத்தில் ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு வழங்கும் ஊதியமானது அத்தியாவசிய பொருட்களின் விலையை விட குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்