உக்ரைன் மக்கள் மீது அக்கறை இருந்தால் போரை தவிருங்கள் - ஜெலென்ஸ்கிக்கு எலான் மஸ்க் அறிவுரை
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
இந்தநிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ரஷி
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.யா - உக்ரைன் போர் தொடர்பாக ஒரு டுவீட் செய்திருக்கிறார். அந்த டுவிட்டரில்,
ரஷியா-உக்ரைன் போரில் அமைதியை ஏற்படுத்தி ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐ.நா சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் முடிவுகளின் அடிப்படையில் போரில் இரு தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும். மேலும் கிரிமியா மற்றும் டான்பாஸ் பிராந்திய மக்கள் தாங்கள் ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தினார்.
இதையடுத்து, உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
உங்களுக்கு எந்த எலான் மஸ்கை பிடிக்கும். ரஷியா ஆதரவு எலான் மஸ்கா? அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்கா?" என போட்டி வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதையடுத்து எலான் மஸ்க் மீண்டும் தனது மற்றொரு டுவிட்டர் பதிவில்,
பெரிய அளவில் போர் ஏற்பட்டால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கிறது. ஏனென்றால், ரஷியா உக்ரைனின் மக்கள் தொகையில் 3 மடங்கு அதிகமாக உள்ளது. உக்ரைன் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், அமைதியைத் தேடுங்கள். அமைதி தான் சிறந்த வழி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.