ரம்ஜான் பண்டிகை - உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Update: 2024-04-11 05:09 GMT

கெய்ரோ,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

'ஈதுல் பித்ர்' என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், வித்தியாசமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் நோக்கிலே உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு முடிந்து, 'ஈகைத் திருநாள்' பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சாலையில் இஸ்லாமியர் புனித ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. எகிப்தின் கெய்ரோவில் உள்ள மசூதிக்கு வெளியே தொழுகை நடத்தினர். ஜெருசலேமின் பழைய நகரத்தில் உள்ள அல் அக்ஸா மசூதி வளாகத்தில் நடந்த தொழுகையில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். ஜெருசலேமின் பழைய நகரத்தில் உள்ள அல் அக்ஸா மசூதி வளாகத்தில் நடந்த தொழுகையில் பாலஸ்தீனியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்