திபெத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.0 ஆக பதிவு
தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
லாசா,
திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 7.38 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.