இலங்கையில் மீன்பிடி படகில் கடத்திய ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இலங்கையில் மீன்பிடி படகில் கடத்திய ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-10-23 00:23 GMT

கோப்புப்படம் 

கொழும்பு,

இலங்கையில் தெற்கு கடல் பகுதி வழியாக படகில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அந்த நாட்டு புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் புலனாய்வு துறை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து தெற்கு டோண்ட்ரா கடல் பகுதியில் படகுகளில் ரோந்து சென்றனர்.

அப்போது கடலில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த ஒரு மீன்பிடி படகை புலனாய்வு அதிகாரிகள் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அந்த படகில் சோதனை செய்தபோது, அதில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, படகில் இருந்த சுமார் 200 கிலோ ஹெராயின் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி ஆகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்