சூடான் ராணுவ தளபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல்

சூடான் ராணுவ தளபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-31 12:27 GMT

Image Courtesy : AFP

கார்டோம்,

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் சூடானின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், சூடான் ராணுவ தளபதி அப்தல் பதா புர்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சூடானில் உள்ள கெபெயிட் நகரில் நடைபெற்ற ராணுவ பட்டமளிப்பு விழாவின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ராணுவ தளபதி அப்தல் பதா புர்கான் காயமின்றி உயிர் தப்பியதாகவும், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்