லைவ் அப்டேட்ஸ்: கடும் போரால் கிழக்கு உக்ரைனில் இருந்து 20 லட்சம் பேர் வெளியேற்றம்

உக்ரைன் மீது ரஷியா 120-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

Update: 2022-06-22 23:42 GMT


Live Updates
2022-06-23 11:00 GMT

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி என்று சீன அதிபர் ஜி ஜீன்பிங் தெரிவித்துள்ளார்.  

2022-06-23 08:08 GMT

உக்ரேனிய ஆயுதப்படையின் சமீபத்திய ராணுவ விரிவுரை சமீபத்தில் வெளியானது. அதில் பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை குறைந்தபட்சம் 34,430 ரஷிய வீரர்களை உக்ரைன் தற்காப்புத் துருப்புக்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதலாக, 1,500 ரஷிய டாங்கிகள் மற்றும் 756 பீரங்கி அமைப்புகள் மற்றும் 240 எம்எல்ஆர் ஆயுதங்கள் ஆகியவற்றை உக்ரைன் ராணுவம் அழித்துள்ளதாக கூறியுள்ளனர்.

2022-06-23 03:52 GMT


ரஷிய ராணுவத்தின்உபகரணங்கள், கண்ணி வெடிமருந்து கிடங்குகளை அழித்த உக்ரைன் ராணுவம்

20 ராணுவ வீரர்களை கொன்றதாகவும், 2 வெடிமருந்து கிடங்குகளையும், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் உட்பட சில உபகரணங்களையும் அழித்ததாகவும் உக்ரைனின் தெற்கு செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது

2022-06-23 00:41 GMT

மாஸ்கோ,

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

உக்ரைன் புகைப்பட பத்திரிகையாளர் மாக்ஸ் லெவினும், வீரர் ஒலக்சிய் செர்னிஷோவும் போரின் ஆரம்ப காலத்தில் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பத்திரிகை சுதந்திர குழுவான எல்லையில்லா நிருபர்கள் குழு நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்களது உடல்கள் மீது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதா என்பதையும் உறுதிசெய்ய இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்