அமேசான் காடுகளில் காடழிப்பு அதிகரிப்பு - நியூயார்க்கை விட 5 மடங்கு பெரிய பகுதி அழிப்பு..!!

மரங்கள் அழிந்து வருவது காலநிலை மாற்றத்தை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.;

Update:2022-07-11 15:02 IST

Image Courtesy : AFP 

பிரேசிலியா,

அமேசான் மழைக்காடு பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, ஈக்வடார் போன்ற 9 நாடுகளில் பரந்து விரிந்து இருக்கிறது. இதன் பரப்பு மொத்த ஐரோப்பிய யூனியனை விட பெரியது. உலகில் எந்த இடத்தையும் விட அமேசானில் அதிக தாவரங்களும், விலங்குகளும் உள்ளன.

ஆனால் கடந்த சில வருடங்களாக காடுகள் அழிப்பால் அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருகின்றன. குறிப்பாக நடப்பு ஆண்டில் மட்டும் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் நியூயார்க் நகரத்தை விட 5 மடங்கு பெரிய பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3 ஆயிரத்து 988 சதுர கிமீ அமேசான் காடுகள் பகுதி (1,540 சதுர மைல்கள்) அழிக்கப்பட்டது என்று தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இன்பே தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசானில் மரங்கள் அழிந்து வருவது வளிமண்டலத்தை மேலும் வெப்பமாக்குவதோடு மட்டுமின்றி காலநிலை மாற்றத்தை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்