பிரேசில்: கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயா்வு
வடகிழக்கு பிரேசிலில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 90 போ் உயிாிழந்துள்ளனா்.;
பிரேசிலியா,
வடகிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளம் குடியிப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் காரணமாக அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.