வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் ஜூன் 8ம் தேதி முதல் நீக்கம் - தென்கொரியா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்தாத வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதியை ஜூன் 8 ஆம் தேதி முதல் நீக்க உள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
சியோல்,
தென்கொரியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுகள் படிப்படியாக குறைந்து வருவதால், முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய தென்கொரிய பிரதமர் ஹான் டக்-சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறை வரும் ஜூன் 8ம் தேதி முதல் நீக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் சர்வேதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாகவும், இருந்தபோதும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்