உளவு வேலையில் ஈடுபட்ட சீன என்ஜினீயருக்கு அமெரிக்காவில் 8 ஆண்டு சிறை

உளவு வேலையில் ஈடுபட்ட சீன என்ஜினீயருக்கு அமெரிக்காவில் 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-01-26 22:49 GMT

கோப்புப்படம்

வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்தவர் என்ஜினீயர் ஜி சாவோகுன். இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு வேலையில் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவுப்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருடவும் முயற்சித்துள்ளார். மேலும் ஆள் சேர்ப்புக்காக விஞ்ஞானிகளையும், என்ஜினீயர்களையும் அடையாளம் கண்டுள்ளார்.

இவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. 2018-ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அறிவிக்காமல், வெளிநாட்டு அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்