சீனா: பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து; 2 பேர் பலி

குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி சரக்கு கப்பல் விபத்திற்குள்ளானது.

Update: 2024-02-22 15:56 GMT

பீஜிங்,

சீனாவில் போஷான் நகரில் இருந்து குவாங்சவ் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அந்த கப்பல் குவாங்சவ் நகரில், லிக்சின்ஷா பாலத்தின் மீது திடீரென மோதி விபத்திற்குள்ளானது.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது, பாலத்தில் ஒரேயொரு பஸ் சென்று கொண்டிருந்தது. அது ஆற்றுக்குள் கவிழ்ந்தது. பின்னர், இதுதவிர 4 வாகனங்கள் கவிழ்ந்து நீருக்குள் மூழ்கின.

இதில், 2 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை. கப்பலில் சரக்கு எதுவும் கொண்டு செல்லப்படவில்லை. கப்பலின் கேப்டனை போலீசார் கைது செய்தனர். அந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்