லண்டன்: கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ்- குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு

லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

Update: 2022-08-10 15:29 GMT

Image Courtesy: AFP

லண்டன்,

வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவுநீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பது வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர்போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. லண்டனில் கழிவுநீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த நோயால் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் இல்லை. பிப்ரவரி மற்றும் ஜூன் 2022 க்கு இடையில் லண்டன் பெக்டன் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பல கழிவுநீர் மாதிரிகளில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்