அமெரிக்கா: துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் கலிபோர்னியாவில் சடலமாக மீட்பு!
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று 4 பேரும் கடத்தப்பட்டனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை.
ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சல்காடோவின் குடும்பத்தை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.