இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் மீனவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்
இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் மீனவர்கள் 2 பேர் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.;
ஆமதாபாத்,
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி ஹரமி நல்லா கடற்கழி பகுதி உள்ளது.300 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இப்பகுதியில் பாகிஸ்தானிய மீனவர்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது வழக்கமாக இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் மீனவர்களின் 9 படகுகளை கண்டனர்.
அவற்றை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அப்போது அந்தப் படகுகளில் இருந்த மீனவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களில் இருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுப் பிடித்தனர்.காலில் காயமடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.