உலகின் 5வது உயரமான கட்டடத்தில் வெறும் கைகளில் ஏறிய இளைஞர்: தடுத்து நிறுத்திய போலீசார்
தென்கொரியாவில் உள்ள உலகின் 5-வது உயரமான கட்டிடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்தை சேர்ந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சியோல்,
தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான 123 மாடி கோபுரத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த இளைஞரை பாதியில் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
லோட்டி வேர்ல்டு டவர் கட்டிடத்தின் மீது 24 வயதான ஜார்ஜ் கிங் தாம்சன் ஏறினார். கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் அவர் ஏறியதால், 73வது தளத்தில் தடுத்து நிறுத்தி பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் போலீசாரிடம் அவரை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். ஜார்ஜ் கிங் இதற்கு முன் 2019ம் ஆண்டில் லண்டனில் உள்ள 72 மாடிகளை கொண்ட ஷார்டு கட்டிடத்தில் ஏறிய போது ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.