உக்ரைன் அழகிக்காக மனைவியைக் கைவிட்டவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

சோபியாவுக்கும் டோனிக்கும் காதல் பற்றிக்கொண்டது. லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.

Update: 2022-07-14 09:55 GMT

லண்டன்

ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து லட்சக்கணகானவர்கள் அகதிகளாக பல்வேறூ நாடுகளுக்கு குடியேறினர். அது போல உக்ரைனை சேர்ந்த சோனொயா கர்கடிம் ( 22)_இங்கிலாந்திக்கு ஓடி வந்தார். அவருக்கு பிராடுபோர்டில் வாழும் டோனி கார்நெட் ( 29), அவரது மனைவியான லோர்னா தம்பதி தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.

ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் காதல் பற்றிக்கொண்டது. லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.

டோனி லோர்னா தம்பதியர் பிரிந்ததற்கு, தான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் சோபியா. நான் லோர்னாவுடன் நீண்ட நேரம் செலவிட்டேன் என்று கூறும் சோபியா, ஆனால், அவர் இரட்டை வேடம் போடுபவர் என்று கூறியுள்ளார்.

எப்போது பார்த்தாலும் சந்தேகம், பதற்றம் என லோர்னா இருந்ததால்தான் , தானும் டோனியும் நெருக்கமானதாக தெரிவித்துள்ளார் சோபியா. எனக்கும் டோனிக்கும் இடையில் எதுவும் இல்லாதபோதே, ஏதோ இருப்பதாக லோர்னா கூறிக்கொண்டே இருந்தார். அது அவர் செய்த தவறு என்கிறார்.

இதற்கிடையில், நான் அவளுக்கு என் வீட்டில் இடமளித்தேன், ஆனால், அதற்கு பதிலாக அவள் இப்படி செய்வாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அவள் கவலைப்படவேயில்லை என்றார் லோர்னா.

இதற்கிடையில், டோனி தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்வதாக லோர்னா நீதிமன்றத்தை நாடினார்.

அதைத் தொடர்ந்து, தன் முன்னாள் மனைவியான லோர்னாவை டோனி நெருங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பிராடுபோர்டில் வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் டோனி நுழையக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், லோர்னா இனி டோனியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடகூடாது என்று தெரிவித்துள்ளது இதற்கு சம்மதித்த லோர்னா முன் வெளியிட்ட செய்திகளையும் நீக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், டோனிக்கும் லோர்னாவுக்கும் பிறந்த பிள்ளைகள் இருவரின் நிலை என்ன என்று தெரியவில்லை.  

Tags:    

மேலும் செய்திகள்