பாகிஸ்தானில் பயங்கரம்; தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் பலி
பாகிஸ்தானின் மஸ்தூங் மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள மசூதியின் அருகே நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாட பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
முதற்கட்ட தகவலின்படி இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். எனவே உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது இந்த மாதத்தில் மஸ்தூங் மாவட்டத்தில் நடைபெற்ற 2-வது பெரிய குண்டு வெடிப்பு ஆகும்.