பாகிஸ்தானில் வாட்டும் குளிர்: 36 குழந்தைகள் பலி

குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-01-11 14:40 GMT

லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் பலியாகி உள்ளனர் . மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம் தேதி வரை பள்ளிகளில் காலை அசெம்பிளி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி குழந்தைகள் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமல், காய்ச்சல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்