மேலும் 30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம்

மேலும் 30 ஆண்டுகள் ஜப்பான் அணுமின் நிலைய ஆயுளை நீட்டிக்க புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Update: 2023-05-31 19:05 GMT

கோப்புப்படம்

டோக்கியோ,

அணுமின் சக்தியை கொண்டு நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதில் முன்னோடி நாடாக ஜப்பான் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானை தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் புகுஷிமா அணுமின் நிலையம் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் பலர் பலவிதங்களில் உடல்நல கோளாறுக்கு உள்ளானர்கள்.

இதனால் நாட்டின் முக்கிய அணுஉலைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மூடப்பட்டிருந்த அணுமின் நிலையங்களை ஜப்பான் அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. மேலும் புதிய உலைகளையும் அது நிறுவி வருகிறது. பொதுவாக ஒரு அணுஉலையின் ஆயுட்காலம் 30 ஆண்டுகள் என பரிந்துரைக்கப்படும்.

ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்களை மேலும் 30 ஆண்டுகள் நீட்டித்து செயல்படுத்த அந்த நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. பசுமை எரிசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவினை ஜப்பான் அரசு எடுத்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் 30 ஆண்டுகள் இயக்கத்திற்கு பின் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மேலும் 30 ஆண்டுகள் இயங்கவிடப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்