இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை பாதிப்பு

இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-21 22:59 GMT

லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்தும் வரும் செலவினங்களை ஈடு செய்யும் விதமாக தங்களின் ஊதியத்தில் 11 சதவீதம் உயர்த்திதர வேண்டும் எனக்கோரி ரெயில்வே ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை இங்கிலாந்து ரெயில்வே நிர்வாகம் எதிர்கொண்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ்கள் அல்லது கார்களில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக சாலைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து வருவதால் வழக்கத்தை விட மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊதிய கோரிக்கைகளில் சமரசத்தை ஏற்படுத்த ரெயில்வே ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்