ரஷியாவின் அச்சுறுத்தலை அடுத்து ஐரோப்பாவில் அமெரிக்க படை அதிகரிப்பு - ஜோ பைடன்
உக்ரைன் மீதான ரஷியாவின் போரை அடுத்து ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படையை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
மாட்ரிட்,
ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நேற்று தொடங்கி 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அங்கு நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவா் கூறுகையில், "நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம்.
மேலும், போலந்தில் ஒரு நிரந்தர தலைமையகத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. இங்கிலாந்தில் கூடுதலாக 2 எப்-35 ரக போர் விமான படைகளை அனுப்ப உள்ளது எனவும் கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்க- நோட்டோ அமைப்பினை வலுப்படுத்த உள்ளதாக அவா் தெரிவித்தார்.பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது " என அவர் தெரிவித்தார்.